Sunday 5 August 2012

இஃப்தார்


நமதூரில் கடந்த ஒரு வருடமாக கர்ழன் ஹஸனா- அழகிய கடன் அறக்கட்டளை என்ற பெயரில் வட்டியில்லாக் கடன் திட்டம் சிறப்பான முறையில் செயலாற்றி வருவது நாம் அறிந்ததே.

இன்று ( 05-08-2012 ) மாலை நமதூர் நடுத்தெருவில் அமைந்துள்ள EPMS  பள்ளி வளாகத்தில் ‘இஃதார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்திற்கு அறக்கட்டளையின் தலைவர் சகோ. M.C. அலி அக்பர் அவர்கள் தலைமை வகித்தார்.


நிகழ்ச்சியின் நிரலாக......





1. வரவேற்புரை: சகோ. M.C. அலி அக்பர் அவர்கள்.

2. மவ்லவி, ஹாபிஸ் யூசுப் பாகவி அவர்கள் சிறப்புரையாக வட்டியின் கொடுமைபற்றிப் பேசினார்கள்.


3. மவ்லவி MM.I. சேக் முஹம்மது அல்புகாரி அவர்கள் சிற்றுரையில் இஸ்லாமியப் பொருளாதாரம்பற்றிப் பேசினார்கள்.


4. அடுத்து, அறக்கட்டளை தோன்றிய விதம் பற்றி, இதன் செயலாளர் சகோ. M. I. ஜமால் முஹம்மது அவர்கள் பேசினார்கள்.


 அழகிய கடன் அறக்கட்டளையின் கடன் விவரங்கள் பற்றி, அதன் பொருளாளர் ஆசிரியர் A.M. மஹபூப் அலி அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டு பேசினார்கள்.




6. “கர்ழன் ஹஸனாவின் துணைத்தலைவர் சகோ. S. அஹ்மது அனஸ் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டது.

7. இறுதியாக துவாவுடன் உரைகள் இனிதே நிறைவுற்று, இஃப்தார் விருந்துநடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான சிறப்பு அழைப்பாளர்களும் அறக்கட்டளையின் மூலம் பயன் பெற்றவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



இஃப்தார் விருந்துஇதன் நிர்வாகிகள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif- செய்தியாளர்: சேக்கனா நிஜாம்



 

1 comment: