Thursday 23 August 2012

பெருநாள் சந்திப்பு



இன்று ( 23-08-2012 ) மாலை நமதூர் நடுத்தெருவில் அமைந்துள்ள EPMS ( English Preparatory Model School ) பள்ளி வளாகத்தில்  கர்ழன் ஹஸனாஅழகிய கடன் அறக்கட்டளையின் சார்பாக அதன் தலைவர் சகோ. M.C. அலி அக்பர் அவர்களின் தலைமையில் இனிதே துவங்கியது.

நிகழ்ச்சியின் நிரலாக......

1. வரவேற்பு: சகோ. அதிரை அஹமது அவர்கள்

2. சகோ. முஹம்மது யூசுப் ஆலிம் அவர்கள் தமது சிறப்புரையாக இஸ்லாமியப் பொருளாதாரம்பற்றிப் பேசினார்கள்.

3. “கர்ழன் ஹஸனாஅழகிய கடன் அறக்கட்டளையின் ஆலோசகர்களுள் ஒருவரான சகோ. A.S. அப்துல் காதர் M.A. அவர்கள் இஸ்லாமிய வங்கியை நோக்கிஎன்ற தலைப்பை ஒட்டிய தனது சிறப்புரையில் அதற்குரிய விளக்கங்களை எடுத்துரைத்தார்கள்.
4. அறக்கட்டளையின் சார்பாகப் பெறப்பட்ட ஜக்காத்நிதியை, ஏழை எளியோர், முதியோர், நலிவுற்றோர், கணவர்களால்  கைவிடப்பட்டோர், வட்டிக்கடனில் மூழ்கியிருப்போர், அன்றாடம் தொழில் செய்து பிழைப்போர் போன்றவர்களுக்கு விநியோகம் செய்தது குறித்த தகவல்களை அதன் தலைவர் சகோ. M.C. அலி அக்பர் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்கள்.

5. அறக்கட்டளையின் கடன் விவரங்கள் பற்றி அதன் பொருளாளர் ஆசிரியர் A.M. மஹபூப் அலி அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்கள்.

6. செயலாளர் சகோ. M. I. ஜமால் முஹம்மது அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டு, இறுதியாக துவாவுடன் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுற்றன.

குறிப்பு : 

1. இந்நிகழ்ச்சியில் ஏராளமான சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

2. இச்சந்திப்பு நிகழ்ச்சியின் செலவினங்கள் இதன் நிர்வாகிகள் சொந்தச் செலவில் ஏற்பாடு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.

தகவல்: சேக்கனா நிஜாம்

https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif

No comments:

Post a Comment