Wednesday 14 November 2012

இஸ்லாமிய வங்கி இந்தியாவில் சாத்தியமா?

'சாத்தியமே' என்று சான்று பகர்கின்றது 'ரிசர்வ் பேங்க் ஆஃ இந்தியா'...!
                                   
வட்டியில்லாத இஸ்லாமிய வங்கி முறையை இந்தியாவிலும் நடைமுறைப் படுத்துவது தொடர்பாக, இந்திய அரசுக்குத் தான் பரிந்துரை செய்துள்ளதாக RBI கவர்னர் திரு. சுப்பா ராவ் அறிவித்துள்ளார்.
                                   
Banking Regulation Act என்ற சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்;  அதன் மூலம், வட்டியில்லாத இஸ்லாமிய வங்கி முறையை நடைமுறைக்குக் கொண்டுவரலாம் என்று அவர் பரிந்துரைத்துள்ளதாக, கடந்த அக்டோபர் 4 அன்று பாண்டிச்சேரியில் நடந்த மாநாட்டில் அறிவித்தார்.

மேற்காணும் சட்டம் (BRA) வட்டியில்லாத வங்கி முறையை அனுமதிக்காததால், இதுவரை இந்தியாவில் இஸ்லாமிய வங்கி இயல் நடைமுறைப் படுத்தப்படவில்லை.  ஆனால், உலகின் பல நாடுகளில் இஸ்லாமிய வங்கி நடைமுறையில் இருந்து, நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றது.

இஸ்லாமிய வங்கி முறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இதனை நடைமுறைப் படுத்தவேண்டும் என்று RBI கவர்னர் உணரத் தலைப்பட்டிருப்பது பற்றி, Institute of Objective Studies (IOS) அமைப்பின் தலைவர் டாக்டர் முஹம்மத் மன்ஸூர் ஆலம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
                                        
"உலகில் பொருளாதாரச் சீரழிவும் குழப்பமும் நிலவும் இன்றையச் சூழலில், உலகம் இஸ்லாமிய வங்கி முறையின் மீது கவனம் செலுத்தி, மக்களைப் பயனடையச் செய்யும் முயற்சி ஒரு பாராட்டத் தக்க முன்னேற்றம் ஆகும்" என்கிறார் டாக்டர் மன்ஸூர் ஆலம்.

இத்தகைய சாதகமான சூழலுக்குக் காரணம், Institute of Objective Studies உள்படப் பல இயக்கங்கள் மற்றும் அமைப்புகளின் அயராத உழைப்புதான் என்றும் டாக்டர் மன்ஸூர் ஆலம் கருத்தறிவித்துள்ளார்.  மேற்குறிப்பிட்ட சட்டத் திருத்தத்தை RBI கவர்னரின் பரிந்துரையின் பேரில் இந்திய அரசாங்கம் கொண்டுவந்து, மிக விரைவில் இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறையைச் செயல்படுத்தும் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார்.

Source:  'The Milli Gazette' - 1 - 15 Nov. 2012

Wednesday 19 September 2012

வட்டிக்கு உதை...!


புதுக்கோட்டை: கந்துவட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள், வட்டியில்லா பொருளாதார மேம்பாட்டு மையம் ஒன்றை துவக்கி, அதன்மூலம் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை, வட்டியில்லாக் கடன் வழங்கி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள, கடலோரக் கிராமங்களில் ஒன்று, அம்மாப்பட்டினம். மணமேல்குடி அருகில் உள்ள இக்கிராமத்தில், இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என, 5,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

ஏழைகள்:


இவர்களில் பல குடும்பத்தினர் வறுமைக்கோட்டுக்கும் கீழ், ஏழ்மை நிலையில் உள்ளனர். விவசாயக் கூலி வேலை செய்வது, மீன் வியாபாரம் செய்வது, கயிறு திரித்தல் போன்றவை தான், இவர்களது தொழில். இதன்மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை நம்பியே, இவர்களது குடும்பம் உள்ளது. ஒரு நாள் வேலைக்குச் செல்லா விட்டால் கூட, இவர்களது பாடு திண்டாட்டம் தான். இதை சமாளிக்க, கந்துவட்டி கும்பலிடம் கையேந்துவதை, அக்கிராம மக்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். குறிப்பாக, 86 குடும்பத்தினர், கந்துவட்டி கும்பலிடம் சிக்கி, மீள முடியாமல், தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும், கொத்தடிமைகளாக வேலை பார்த்த சம்பவங்களும் நடந்து உள்ளன. இஸ்லாத்தின் கொள்கைப்படி, வட்டி வாங்குவது பாவச்செயல் என்பதை உணர்ந்த, அக்கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள், கந்துவட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்க, நடவடிக்கைகளை துவக்கினர். இதற்காக, 25 பேரை உறுப்பின ராக கொண்ட, "வட்டியில்லா பொருளாதார மேம்பாட்டு மையம்' என்ற, தன்னார்வ அமைப்பை உருவாக்கினர். இதன்மூலம், ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு, கல்வி, மருத்துவம், சிறு தொழில் போன்றவற்றுக்கு, 3,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை, வட்டியின்றி கடன் வழங்கி வருகின்றனர். ஜாதி, மத, இன வேறுபாடின்றி, ஏழ்மை நிலையில் உள்ள அனைவருக்கும், கடன் வழங்குகின்றனர். மொத்தம், கடன் தொகையை, 60 நாட்களில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பது தான், இவர்கள் விதித்துள்ள நிபந்தனை. இதை ஏற்று, கடன் வாங்கிய அனைவரும், முறையாக கடனைத் திருப்பிச் செலுத்தி வருகின்றனர். இதுவரை, 2,000க்கும் மேற்பட்டவர்களுக்கு, ஏழு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கியுள்ளனர். வட்டியில்லாக் கடன் வழங்கும் சேவை துவங்கியது முதல், அம்மாப்பட்டினம் கிராமத்தில், கந்துவட்டி கும்பல் நுழைய தடைவிதிக்கப்பட்டது. ஆண்டாண்டு காலமாக, அக்கிராமத்தை அச்சுறுத்தி வந்த கந்துவட்டி கும்பல், தற்போது அந்த கிராமத்துக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இயக்கம்:


கந்துவட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல், வரதட்சணைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையை, அக்கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் துவக்கியுள்ளனர். இதற்காக, "வரதட்சணை புதைப்பு' என்ற இயக்கத்தை துவக்கியுள்ள அவர்கள், இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, மாநாடு மற்றும் பேரணி நடத்தியுள்ளனர். கடலோரக் கிராமங்களை குறிவைத்து, கட்டுமாவடி மற்றும் எஸ்.பி., பட்டினத்தில் துவங்கிய பேரணியில், பெண்கள் உட்பட, 6,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதன்மூலம் வரதட்சணை கொடுமைகளுக்கும், விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற நம்பிக்கையும், அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து, வட்டியில்லா பொருளாதார மேம்பாட்டு மையத்தின் தலைவர் முகம்மது இத்திரீஸ் கூறியதாவது: அம்மாப்பட்டினம் கடலோரக் கிராமத்தில், ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைவரும் சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம். கந்துவட்டி கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக, இந்த அமைப்பை உருவாக்கினோம். இதன்மூலம் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு, 3,000 முதல், 10 ஆயிரம் ரூபாய், வரை வட்டியில்லாக் கடன் வழங்கி வருகிறோம்.

ஜாதி, மதம் இல்லை:


கடன் வழங்க நாங்கள் ஜாதி, மதம் பார்ப்பது கிடையாது. கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இதுவரை, 5,000க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்து உள்ளனர். இது போன்று, வரதட்சணைக்கு எதிரான நடவடிக்கைகளையும் துவக்கியுள்ளோம். விரைவில், அப்பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு முகம்மது இத்திரீஸ் கூறினார்.


Wednesday 5 September 2012

ஜகாத் - ஓர் எளிய அறிமுகம்



 (Nguh. ,];khaPy; `]dP)


[fhj; flikahdtHfs;:

1. nghUs; mtupd; ifapy; ,Uf;f Ntz;Lk; (mijr; nrytopf;Fk; KOj; jFjp ,Uf;f Ntz;Lk;)

2. nghUs; [fhj; flikahFk; msit (ep]hig) mile;jpUf;f Ntz;Lk; 

3. jd; mbg;gilj; Njitf;Fg; Nghf kPjk; ,Uf;f Ntz;Lk; (jhd; gad;gLj;Jk; cil> tPL> thfdk; Mfpatw;wpd; kPJ [fhj; ,y;iy)  

4. fldpy;yhky; ,Uf;f Ntz;Lk; 

5. nghUs; tsHr;rpailaf; $bajhf ,Uf;f Ntz;Lk;. jq;fk;> nts;sp ve;j epiyapy; ,Ue;jhYk; (MguzkkhfNth my;yJ nghUshfNth) [fhj; flikahFk;  

tpiy kjpf;f Kbahj fw;fs;> Kj;J> kufjk; Nghd;wtw;wpy; tsHr;rp ,y;yhjjhy; [fhj; flikahfhJ. Mdhy;> tpahghuj;jpw;fhf ,Ue;jhy; [fhj; nfhLf;f Ntz;Lk;.

6. [fhj; nfhLf;f Ntz;ba eifNah gzNkh xUtuplk; xU tUlk; ,Ue;jpUf;f Ntz;Lk; - 


[fhj; flikahFk; msT:

jq;fk;: xUtuplk; 85 fpuhk; jq;fk; (10½ gTd;) my;yJ mjw;F Nky; ,Ue;jhy;> mtu; mjw;F KOikahf [fhj; nfhLf;f Ntz;Lk;. (,d;iwa tpiyg;gb 10½ gTdpd; tpiy 2>52>280 &gha;fs; MFk;. cjhuzj;jpw;F. xUtuplk; 15 gTd; ,Ue;jhy; fPo;f;fz;l Kiwg;gbf; nfhLf;f Ntz;Lk;.
1 gTd; - &. 24>026.66
15 gTd; - 15  &. 24>026.66 - &. 3>60>400.01
nfhLf;f Ntz;ba njhif  &. 3>60>400.01 ÷ 40 - &. 9010.0003
1 fpuhk; - &. 24>026.66 ÷ 8 - &. 3003.33

nts;sp: 612 fpuhk; (76½) my;yJ mjw;F Nky; ,Ue;jhy; mtH mjw;F KOikahf [fhj; nfhLf;f Ntz;Lk; (,d;iwa epytug;gb 612 fpuhk; nts;spapd; tpiy 32>208.94 &gha;fs; MFk;). cjhuzj;jpw;F xUtuplk; 700 fpuhk; nts;sp ,Ue;jhy; fPo;fz;l Kiwg;gb nfhLf;f Ntz;Lk;.
1 fpuhk; - &. 52.629
700 fpuhk; - 700 - &.52.629 - &. 36>840.30
nfhLf;f Ntz;ba njhif  &. 36>840.30 ÷ 40 - &. 921

tq;fpj; njhif my;yJ ifapy; ,Uf;Fk; gzk;: xUtH tq;fpapNyh ifapNyh XH Mz;L fPo;f;fz;l msT gzk; itj;jpUe;jhy; mtH kPJ [fhj; flikahFk;. Mjhug; g+Htkhd `jP];fs; mbg;gilapy; gz tp~aj;jpy; [fhj; nts;spiaf; nfhz;Nl fzf;fplg;gLfpwJ. Mf> ,d;iwa epytug;gb 36>840 &gha;fs; xUtuplk; ,Ue;jhy; mtH [fhj; nfhLf;fj; jFjpAs;stH MfptpLthH. cjhuzj;jpw;F xUtuplk; 1 yl;rk; ,Ue;jhy; fPo;fz;l Kiwg;gb nfhLf;f Ntz;Lk;.
tq;fpj; njhif - &. 1>00>000
nfhLf;f Ntz;ba njhif  &. 1>00>000 ÷ 40 - &. 2>500

[fhj; thq;fj; jFjp cilatu;fs;:

1. /gf;fPu;; - [fhj; nfhLf;Fk; jFjpapy;yhjtH;. 2. kp];fPd;; - nry;tk; VJk; ,y;yhjtu;.
3. [fhj; tR+ypg;gtUf;F mtUf;F $ypahf mjpypUe;Nj nfhLf;f Ntz;Lk;. 4. vtu;fspd; ,jak; ,];yhj;jpd; gf;fk; <u;f;fg;gl;Ls;sNjh : ,jd; fUj;J K];ypk;fspy; gyfPdkhf cs;stu;fs;. mtu;fSf;F [fhj; nfhLj;jhy; mjd; %yk; mtu;fs; gyg;gl;L mtu;fs; <khd; cWjp ngWk; vd;wpUe;jhy;. K];ypk; my;yhjtu;fSf;F [fhj; nfhLg;gJ $lhJ. 5. mbikfs; : mtu;fspd; tpLjiyf;fhf [fhj; nfhLf;fyhk;. Mdhy; ,d;iwa epiyapy; mtu;fs; ,y;iy. Mdhy; ,g;gbahd epiyapy; cs;stu;fs; ,d;iwf;F ,Ue;jhy; mtu;fSf;F nfhLf;fyhk;. 6. fld;gl;ltu;fs; : [fhj; njhifia /gf;fPUf;F nfhLg;gij tpl fld;gl;ltu;fSf;F nfhLf;fyhk;. 7. my;yh`;tpd; ghijapy; NghupLNthu;. 8. topNghf;fH;.


[fhj; thq;fj; jFjpapy;yhjtu;fs;:

1. fh/gpu; (,iwkWg;ghsu;) 2. gzf;fhud; 3. egpfshupd; FLk;gj;jpw;F 4. je;ij> ghl;ldhu; 5. kfd;> Ngud; 6. kidtp (mJ Nghd;W kidtp jd; fztDf;F [fhj; nfhLf;f KbahJ.) ,tu;fs; my;yhj kw;w cwtpdu;fs; [fhj; thq;f jFjp cilatu;fshf ,Ue;jhy; mtu;fSf;F nfhLg;gNj rpwe;jJ. 7. gs;spthry; fl;Ltjw;F> kju]h fl;Ltjw;F> NuhL NghLtjw;F> ghyk; fl;Ltjw;F [fhj; nfhLg;gJ $lhJ.

ika;aj;ij mlf;fk; nra;tjw;F [fhj; nryT nra;af;$lhJ. Vnddpy;> ngw;Wf;nfhs;tJ vd;gJ NkNy cs;s R+o;epiyfspy; ,y;yhj fhuzj;jhy; [fhj; nfhLf;f KbahJ. ([fhj;ij ngWgtu; mij jd; KO ,~;;lg;gb nryT nra;a jFjpAilatuhf ,Uf;fNtz;Lk;. mJ ,y;yhj ,lj;jpy [fhj; nfhLf;f mDkjpapy;iy- ,J xU tpjp) cwtpdu;fNs [fhj; nfhLf;f KOj; jFjpAs;stu;fs;. mtu;fs; NkNy nrhy;yg;gl;l [fhj; thq;Fk; jFjpapy; ,Ue;jhy;. mjd; gpd; K`y;yh thrpfs;> Cu; thrpfs;. ,e;j mbg;gilapy; [fhj; nfhLf;fg;gl;lhy; Viofs; ,Uf;f khl;lhu;fs;. jd; Cu;> ehl;by; cs;stu;fis tpl kw;w ehLfspy; cs;stu;fs; kpfTk; NjitAila K];ypk;fshf ,Ue;jhy; mtu;fSf;Ff; nfhLg;gJ $Lk;.

Sunday 26 August 2012

வட்டியை இஸ்லாம் தடுப்பது ஏன்?



இது போன்ற கேள்வி, அடிக்கடிச் சில சமுதாயக் கூட்டங்களின்போது  எழுப்பப் படுகின்றது.  ஏனெனில், வட்டியைக் குறிக்கும் அரபுச் சொல்லான 'ரிபா' என்பது வேறு; ஆங்கிலச் சொல்லான 'இன்டரெஸ்ட்' என்பது வேறு என்று சிலர் கருத்துக் கொண்டிருப்பதுதான்.  அதனால், இரண்டையும் வேறு படுத்தி, இன்று பரவலாக இருக்கும் வட்டி முறையை நியாயப் படுத்துகின்றார்கள்.

'ரிபா' எனப்படும் இந்த வட்டிதான் குர்ஆனாலும் ஹதீஸாலும் தடை செய்யப் பட்ட ஒன்று என்பதில் ஐயமில்லை.  குர்ஆன் வட்டியைப் படிப்படியாக நான்கு இறைவசனங்கள் மூலம் தடை செய்துள்ளது.  அவற்றுள்   30:39 என்ற முதல் வசனம் மக்காவில் அருளப்பட்டது.  எஞ்சிய மூன்று வசனங்களும் (4:161, 3:130-2, 2:275-81) மதீனாவில் அருளப்பட்டன.  

இவற்றுள் இறுதியான வசனம் (2:275-81) அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்நாள் இறுதிப் பகுதியில் இறங்கிற்று.  வட்டியை வாங்கித் தின்றவர்களை இவ்வசனங்கள் வன்மையாகக் கண்டித்ததோடு மட்டுமன்றி, அவர்கள் இறைவனுடனும் இறைத்தூதருடனும் போர் தொடுப்போர் என்றும் பறை சாற்றின.  இவ்வசனங்கள் வட்டிக்கும் வணிகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டைத் தெளிவாக எடுத்துரைத்தன.  நிலுவையிலிருந்த வட்டிகள் அனைத்தையும் விட்டுவிடும்படியும், அதில் அவர்கள் ஈடுபடுத்திய முதலீட்டை மட்டும் எடுத்துக்கொள்ளும்படியும் முஸ்லிம்களை வலியுறுத்தின.  தம்மிடம் வட்டி வாங்கியவர்கள் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத சிரமமான நிலையில் இருந்தால், அதைக்கூட விட்டுக் கொடுக்கும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவான வார்த்தைகளால் வட்டியைத் தடை செய்துள்ளார்கள்.  வட்டி வாங்குபவர்களை மட்டுமன்றி, வட்டிக்கு அடிமைப்பட்டுக் கொடுப்பவர்களையும், வட்டிக் கணக்கு எழுதுபவர்களையும், அதற்குச் சாட்சியாக இருப்பவர்களையும் அதில் சபித்துள்ளார்கள்.
                     (ஆதார நூல்கள்: ஸஹீஹ் முஸ்லிம், திர்மிதீ, முஸ்னது அஹ்மத் )

வட்டியை, அது பாவம் என்று தெரிந்துகொண்டே, வாங்குபவர்கள் தம் சொந்தத் தாயை முப்பத்தாறு தடவை விபச்சாரம் செய்த குற்ற உணர்வைப் பெறுகின்றார் என்றும் நபியவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
                                                       (ஆதார நூல்கள்:  இப்னு மாஜா, பைஹகீ)

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே குர்ஆனும் நபிவழியும் 'ரிபா' எனும் வட்டியைத் தடை செய்திருக்க, உலகின் பெரும்பாலான சமுதாயங்கள் முஸ்லிம்கள் உள்பட இன்னும் இதைப்பற்றிப் புரியாமல் தெளிவற்ற நிலையில் இருப்பது, அது சரியாக விளக்கப்படவில்லை எனக் கருதுவது வியப்பிலும் வியப்பாக உள்ளது!  எனவேதான், இந்த 'ரிபா' நம் முன்னோர்களால் எவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டது என்பதை அதன் உண்மையான பொருளை விளக்கி நாம் அலச வேண்டியதாக இருக்கிறது. 

அரபுச் சொல்லகராதிகளை நமக்குத் தந்தவர்களான இப்னு மன்தூர் (லிசானுள் அரப்), அல்-ஜுபைதீ (தாஜுல் அருஸ்), ராகிப் அல்-இஸ்ஃபஹானி (அல்-முஃப்ரதாத்) ஆகியவர்களைச் சான்றுகளாகக் கொள்ளவேண்டிதாய் உள்ளது.  இவர்கள் அனைவரும் 'ரிபா' என்பது, 'கூடுதல்', 'மேலதிகமானது', 'விரிவடைவது' அல்லது 'வளர்ச்சியடைவது' போன்ற பொருள்களில் எடுத்தாள்கின்றனர்.  எனினும், எல்லாப் பொருள் வளர்ச்சிகளும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவையல்ல.  இதனடிப்படையில், இலாபம் என்பது, போட்ட முதலைவிடக் கூடுதலாக நமக்குக் கிடைப்பதாகும்; எனவே, அது நமக்குத் தடை செய்யப்பட்டதன்று.  அவ்வாறாயின், தடை செய்யப்பட்டது என்பது யாது?

இந்தக் கேள்விக்கு விடை தர முழு உரிமை பெற்ற மாமனிதர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவர் மட்டுமே எனக் கூறலாம்.  ஏனெனில், அவர்கள்தாம் கடன் அளித்தல் என்ற ஒன்றுக்காக ஏதேனும் அன்பளிப்பையோ, சேவையையோ, சலுகையையோ அடைவதைத் தடை செய்த பெருமான்.  அவர்கள்தான் சொன்னார்கள்:  "பிறருக்குக் கடன் வழங்குபவர், அதற்காக அன்பளிப்பு எதையும் பெறக் கூடாது."  நபிமொழிக் கலை வல்லுநர் இமாம் புகாரி (ரஹ்)அவர்கள் அறிவித்த இந்த நபிமொழியை இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் தமது 'அல்-முன்தகா' எனும் நூலில் எடுத்துரைக்கிறார்கள்.

இன்னொரு நபிமொழியும் இதனைத் தெளிவு படுத்துகின்றது:  "மற்றவருக்குக் கடனுதவி செய்யும் ஒருவர், அவருடன் வழக்கமாக நடந்துகொள்வது போலன்றி, அதற்குப் பகரமாகக் கடன் பெற்றவரிடமிருந்து ஓர் உணவையோ அவருடைய வாகனத்தின் மீது சவாரி செய்வதையோ பகரமாகப் பெறக்  கூடாது."  (சுனன் அல்பைஹகி, கித்தாபுல் புயூஉ)

மேற்கண்ட நபிமொழிகள், 'ரிபா' என்பதும், இன்று மக்களின் புழக்கத்தில் இருக்கும் 'வட்டி'  (interest) என்பதும் ஒன்றுதான் என்பதைத் தெளிவாக்குகின்றன.  இஸ்லாமிய வரலாற்றில் முன்னிலை வகிக்கும் பேரறிஞர்கள் பலரின் எழுத்துகளும் இக்கருத்தைத்தான் பிரதிபலிக்கின்றன.  இதற்கு மாறான கருத்தைத் தரும் குர்ஆன் விரிவுரைகளோ அரபி மொழி அகராதிகளோ இல்லை என்பதுவே உண்மை நிலை.  பேரறிஞரும் வான்மறை குர் ஆனின் விரிவுரையாளருமான அல்-குர்த்துபி (இறப்பு: ஹிஜ்ரி 671 / கி.பி. 1070) அவர்கள் தமது விரிவுரையில் குறிப்பிடுவதாவது:  

"கடனாகக் கொடுக்கப்பட்ட தொகையைவிடக் கூடுதலாகப் பெறும் சிறிய பெரிய தொகை எதுவாயினும், ஒரு பிடி வைக்கோலாயினும் ஒரு தானியத்தின் பகுதியாயினும், அது வட்டியேயாகும் என்ற நபியவர்களின் அறவுரையை  முஸ்லிம்கள் அனைவரும் ஒருமித்த அடிப்படையில் ஏற்றுக்கொள்கின்றனர்."

'லிசானுள் அரப்' எனும் அரபி அகராதியைத் தொகுத்த இப்னு மன்தூர் (இறப்பு: ஹிஜ்ரி 711 / கி.பி. 1311) அவர்கள் தெளிவாகக் குறிப்பிடுவதாவது:  ஒருவர் கொடுத்த கடனுக்காக எந்த ஒரு தொகையையோ வெகுமதியையோ ஒரு பிரதி உபகாரத்தையோ பெற்றுக்கொள்வதற்குப் பெயர்தான் தடை செய்யப்பட்ட வட்டியாகும்.  இக்கருத்தையே அறிஞர் ஃபக்ருத்தீன் அல்-ராஜி (தஃப்ஸீர் அல்-கபீர்), அபூபக்ர் அல்-ஜஸ்ஸாஸ் (அஹ்காம் அல்-குர்ஆன்) போன்ற அறிஞர்கள் வலியுறுத்திப் பேசுகின்றனர்.

எனவே, பண்டைக் காலம் முதல், 'ரிபா' என்ற சொல்லுக்கு, கடனுக்கான தவணையின் முடிவில் அந்தக் கடன் தொகையுடன் நிபந்தனையிட்டுச் சேர்த்துக் கொடுக்கும் தொகை என்றே பொருள் கொள்ளப்பட்டு வந்துள்ளது.  அண்மைக் காலத்தில் கூடிய அனைத்துலக இஸ்லாமியச் சட்ட வல்லுனர்களின் மாநாடுகளில் (பாரிஸ்-1951, கெய்ரோ-1965, 1985, மக்கா-1986) ஒருமித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தும் இதுவேயாகும்.

இவ்வாறான உறுதி மிக்க பெரும்பான்மைக் கருத்துகளுக்கு முன்னால், வட்டி இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதன்று என்று ஓரிருவர் கருத்துத் தெரிவிப்பதால் உண்மைக்கு ஒன்றும் குறைவு வந்துவிடப் போவதில்லை.  இது போன்ற அங்குமிங்குமான 'புரட்சி' மொழிகளால் பொதுக் கருத்தில் எந்த விதப் பாதிப்பும் உண்டாகிவிடாது.  இவற்றின் காரணமாகவே சிலர் 'வட்டி' என்பதன் பொருள் யாது என்பதில் குழம்பி நிற்கிறார்கள்.  'ரிபா' எனும் சொல் 'ஷரீஆ'வில் இருவேறு பொருள்களில் கையாளப்படுவதுதான் இந்தக் குழப்பத்திற்குக் காரணம் எனலாம்.  அவ்விரண்டையும் அவற்றின் சரியான நிலையில் மக்கள் பொருத்திப் பார்க்காததும் மற்றொரு காரணமாகும்.  

Thursday 23 August 2012

பெருநாள் சந்திப்பு



இன்று ( 23-08-2012 ) மாலை நமதூர் நடுத்தெருவில் அமைந்துள்ள EPMS ( English Preparatory Model School ) பள்ளி வளாகத்தில்  கர்ழன் ஹஸனாஅழகிய கடன் அறக்கட்டளையின் சார்பாக அதன் தலைவர் சகோ. M.C. அலி அக்பர் அவர்களின் தலைமையில் இனிதே துவங்கியது.

நிகழ்ச்சியின் நிரலாக......

1. வரவேற்பு: சகோ. அதிரை அஹமது அவர்கள்

2. சகோ. முஹம்மது யூசுப் ஆலிம் அவர்கள் தமது சிறப்புரையாக இஸ்லாமியப் பொருளாதாரம்பற்றிப் பேசினார்கள்.

3. “கர்ழன் ஹஸனாஅழகிய கடன் அறக்கட்டளையின் ஆலோசகர்களுள் ஒருவரான சகோ. A.S. அப்துல் காதர் M.A. அவர்கள் இஸ்லாமிய வங்கியை நோக்கிஎன்ற தலைப்பை ஒட்டிய தனது சிறப்புரையில் அதற்குரிய விளக்கங்களை எடுத்துரைத்தார்கள்.
4. அறக்கட்டளையின் சார்பாகப் பெறப்பட்ட ஜக்காத்நிதியை, ஏழை எளியோர், முதியோர், நலிவுற்றோர், கணவர்களால்  கைவிடப்பட்டோர், வட்டிக்கடனில் மூழ்கியிருப்போர், அன்றாடம் தொழில் செய்து பிழைப்போர் போன்றவர்களுக்கு விநியோகம் செய்தது குறித்த தகவல்களை அதன் தலைவர் சகோ. M.C. அலி அக்பர் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்கள்.

5. அறக்கட்டளையின் கடன் விவரங்கள் பற்றி அதன் பொருளாளர் ஆசிரியர் A.M. மஹபூப் அலி அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்கள்.

6. செயலாளர் சகோ. M. I. ஜமால் முஹம்மது அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டு, இறுதியாக துவாவுடன் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுற்றன.

குறிப்பு : 

1. இந்நிகழ்ச்சியில் ஏராளமான சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

2. இச்சந்திப்பு நிகழ்ச்சியின் செலவினங்கள் இதன் நிர்வாகிகள் சொந்தச் செலவில் ஏற்பாடு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.

தகவல்: சேக்கனா நிஜாம்

https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif

Sunday 19 August 2012

காலத்தின் கட்டாயம்


THE NEED OF THE HOUR

After going through various comments on the launching of a new economic entity – ADIRAI QARDHAN HASANA (hereinafter referred to as AQH), whose exclusive motto is for emancipation of our business community from the clutches of Interest (Riba) – Mongers, it is our sober and sincere attempt to showcase the ground realties which paved the way for commencing this programme.  We believe that launching AQH is our social responsibility.

We deem it necessary and important to launch a special platform for specialized treatment for curing economic disease; an exclusive deal is the need of the hour to eliminate interest and emancipate the poor and down trodden people from their financial hardships.

The financiers are roaming freely on our streets, intruding and intimidating our people and establishing their sphere of influence in the day to day affairs of native life.

The financiers are successfully encashing on the insufficient fund position of small business people, and those poor and downtrodden affected by poverty, financial perils, social upheavals, business collapse, obstacles and lack of enthusiasm.

In spite of various legal restrictions, the unscrupulous activities of money lenders increasing day by day.  It is in the interest of people, following rules are enacted and regulated in our state:

The Interest Act of 1978, Usurious Loan Act of 1918, Interest Tax Act of 1974, Interest on Delayed Payments Act of 1993, T.N. Protection of Interests of Depositors Act 1997, T.N. Prohibition of Charging Exorbitant Interest Act of 2003 and Criminal Law Amendment Ordinance 1944.

It is worth while to note that the  TN Money Lenders Act of 1957, Section 7 says that no money lender shall charge on any loan at a rate exceeding such rate as the government may fix from time to time.  But in practice exorbitant interest are collected through various forms of interest.  These interests are punishable under Section 7 of Money Lender Act of 1957 and Section 4 of T.N Prohibition of charging exorbitant Interest Act of 2003.  But nothing can be done.

Considering our inability to extinguish this social menace, it is decided to initiate a new entity, ‘QARDHAN HASANA’, which referred as beautiful / benevolent loan / goodwill loan / gratuitous loan for the benefit of our community. Interest is injustice.  Replacing interest with Qardhan Hasana could alleviate socio – economic evils of our society.

As a first step to do away with interest dealings among the small business community, it is decided to target petty shops, small business vendors, daily wage earners, service providers and self employed.  Many of the targeted groups were already trapped by interest mongers and about to be fallen prey to them. Our teams were there for relinquishing the bad practices and advising the poor people not to go with the ‘devils’!  They approached god fearing entrepreneurs who lack financial support to improve the existing business or to start a new one.  This type of micro financing was carried out among the group using the ‘Shariah’ principles of ‘Quardhan Hasana’.  It is the beginning and an exclusive outlet for interest free Micro Financing activity to remove ‘riba’ and it is the NEED OF THE HOUR.

AQH is hearing and healing the financial wounds and they are caring and sharing the feelings of the poor people. Let us applaud and appreciate the policies and programmes of AQH.

(Scripted by: A.S. Abdul Khadir, Chennai)


Tuesday 14 August 2012

வட்டி



http://www.satyamargam.com/images/stories/news11/no-interest.jpgவட்டிக் கொடுமையைப் பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரையாக சத்தியமார்க்கம்.காம் வாசக சகோதரி ஹாஜிரா தாஜுன் எழுதி அனுப்பியதை இங்குப் பதிப்பதில் மகிழ்கிறோம்! எல்லாம் வல்ல அல்லாஹ் வட்டியின் அனைத்து வழிகளிலிருந்தும் நம்மைப் பாதுகாப்பானாக!
அடையாள அட்டை
பெயர்
:
வட்டி
புனைப்பெயர்
:
இரத்தம் உறிஞ்சும் அட்டைப்பூச்சி, உயிர்க்கொல்லி
உடன் பிறந்தோர்
:
ஒரு பைசாவிலிருந்து பல பைசா வட்டி வகைகள், கந்து, மீட்டர், இன்ஷூரன்ஸ், வங்கிக் கடன்நிதியுதவி (எ) ஃபைனான்ஸ், க்ரெடிட் கார்டு வட்டிகள்
நண்பர்கள்
:
பணக்கார ஃபைனான்ஸியர்கள், சேட்டுகள், வட்டிக்குக் கடன் கொடுப்போர், லேவாதேவிக்காரர்கள்
எதிரி
:
தர்மம், ஸகாத்
தொழில்
:
சுரண்டல்
உபதொழில்
:
தற்கொலைக்குத் தூண்டுதல்கற்பை நஷ்ட ஈடாகப் பெறுதல்
முகவரி
:
வங்கிகள், அடகுக்கடை, ஃபைனான்ஸ் (நிதி நிறுவனங்கள்)
விருப்பம்
:
சொத்து, உயிர், கற்பு
வெறுப்பு
:
தனக்கெதிரான பிரச்சாரம், வட்டியில்லாக் கடன்
எதிர்காலத் திட்டம்
:
கோடிக்கணக்கில் பணம் சேர்ப்பது
சாதனை
:
உலக வங்கியில் வட்டிக்குக் கடன் வாங்கியதில் இந்தியாவுக்கு முதலிடம் (ஒவ்வொரு இந்தியனின் தலையிலும் 24,000 ரூபாய் கடன்).
பரிசு
:
நிரந்தர நரகம்



அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பார்ந்த சகோதர  சகோதரிகளேஎந்தவிதமான கஷ்ட காலத்திலும் வட்டியின் பக்கம் தலை சாய்த்து விடாதீர்கள்ஏனெனில் வட்டி சம்பந்தப்பட்ட அனைத்தையும் அல்லாஹ் வெறுக்கின்றான்.

இதைப்பற்றிஅல்லாஹ்  தன் திருமறையில்,
   يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ
அல்லாஹ் வட்டியை  (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்அழித்து விடுவான்இன்னும் தான தர்மங்களை பரக்கத்துகளைக் கொண்டுபெருகச் செய்வான்(தன் கட்டளையை) நிராகரித்துக்கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை   (2:276) என்றும்,
 ۖ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً
ஈமான் கொண்டோரேஇரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக்கூடிய வட்டியை(வாங்கி)த் தின்னாதீர்கள்இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி(இதைத் தவிர்த்து)க் கொண்டால்வெற்றியடைவீர்கள் (3:130) என்றும் எச்சரிக்கிறான்.

"வட்டி வாங்குபவர்கள்வட்டி கொடுப்பவர்கள்அதை எழுதுபவர்கள் மற்றும் ஸதகா கொடுக்க மறுப்பவர்கள் – இவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். - அறிவிப்பாளர் : அலீ (ரலி)திர்மிதி 5347.

பச்சை குத்திவிடுபவளையும்பச்சை குத்திக்கொள்பவளையும்வட்டி உண்பவனையும்வட்டி உண்ணக்  கொடுப்பவனையும்  நபி (ஸல்)  அவர்கள்  சபித்தார்கள்.  நாய்  விற்ற காசுவிபசாரியின்         வருமானம்  ஆகியவற்றைத்  தடை  செய்தார்கள்.  மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்அவர்கள் சபித்தார்கள். -  - அவ்னிப்னி அபீ ஜுஹைஃபா (ரலி)புகாரீ 2086.

"அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், "இறைத்தூதர் அவர்களே! அவை எவை?" என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள்,
*அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது
*சூனியம் செய்வது, 
*நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வது, 
*வட்டி உண்பது
*அனாதைகளின் செல்வத்தை உண்பது,
*போரின்போது புறமுதுகு காட்டி ஓடுவது,
அப்பாவிகளானஇறைநம்பிக்கை கொண்ட கற்புள்ள பெண்களின்மீது அவதூறு கூறுவது" 
என்று (பதில்) கூறினார்கள். - அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி)    புகாரீ 2766.
 இப்படி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெறுக்கின்ற வட்டியின் பக்கம் நாம் போகலாமா?

"பிறரிடம் உதவி கேட்டால் தர மறுக்கிறார்கள்வட்டியில்லாக்  கடனும்  கொடுக்க மறுக்கிறார்கள்.  பிறகு என்னதான் செய்வது?  வட்டிக்குத்தான் கடன்  வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது"  என்று  சிலர்  கூறுகிறார்கள்.  செலவழிக்கப்  பணம் இல்லாவிட்டால்  வட்டிக்குப் பணம் கிடைக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டு  வட்டியின் பக்கம் போகிறோம்வட்டி என்பதே கிடையாது என்று நினைத்தால் போவோமா?சற்றுச் சிந்தியுங்கள். தங்களது ஆடம்பரச் செலவுகளுக்கும் கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளில் பிறர் பார்த்து மெச்சுவதற்காக ஊராருக்கு விருந்து போடுவதற்கும் வட்டிக்குப் பணம் வாங்கும் எத்தனையோ பேர் நம் சமுதாயத்திலும் உள்ளனர்.  பன்றி மாமிசம்  ஹராம் என்று எல்லோருக்கும் தெரியும்எந்த அளவுபசியிருந்தாலும் பன்றி மாமிசத்தை உண்ண மாட்டோமல்லவாஉணவு எதுவும் கிடைக்காத, உயிர் போகும்  பட்சதில்  பன்றி மாமிசத்தை  உண்ணலாம்  என்று  சலுகை  இருந்தும்  நாம்  உண்ணமாட்டோம்அதே போன்றே, இந்த வட்டியையும் ஒரு பன்றி மாமிசமாகக் கருத வேண்டும்.

ஏனெனில், இந்த வட்டியின் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட குடும்பங்கள்  எத்தனைதமது கற்பைப்  பறிகொடுத்த  பெண்கள்  எத்தனைதம் பெற்றோர்பிள்ளைகள்,  உறவினர்களை  இழந்தோர் எத்தனைஇவை  யாவற்றையும்  கணக்கிட  முடியாதுஅந்த அளவிற்கு இந்த வட்டியின் கொடுமை  தலை  விரித்தாடுகிறதுவட்டிக்காகப்  பணம்  கொடுப்பதுவட்டிக்குப்  பணம்  வாங்குவது  மட்டுமல்லஅதற்காக  சாட்சிக்  கையெழுத்துப்  போடுவதும்  பாவமேயாகும்அதற்கு  மறுமையில்  மிகப்பெரும் வேதனை மட்டுமல்லநிரந்தர நரகமும் உண்டு.

இதைப்பற்றி அல்லாஹ் தன் திருமறையில்,
الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لاَ يَقُومُونَ إِلاَّ كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُواْ إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَن جَاءهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىَ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللّهِ وَمَنْ عَادَ فَأُوْلَـئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ
“யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோஅவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப் பட்ட  ஒருவன்  பைத்தியம்  பிடித்தவனாக  எழுவது  போலல்லாமல்  (வேறுவிதமாய்)  எழமாட்டார்கள். அதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக  வியாபாரம்  வட்டியைப்  போன்றதே” என்று  கூறியதினாலேயாம்அல்லாஹ்  வியாபாரத்தை  ஹலாலாக்கிவட்டியை ஹராமாக்கியிருக்கிறான்ஆயினும்  யார்  தன்  இறைவனிடமிருந்து  நற்போதனை வந்த பின் அதைவிட்டும் விலகிவிடுகிறானோஅவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானதுஎன்றாலும், அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின்பால்) திரும்புகிறார்களோ, அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.  (2:275) என்று எச்சரிக்கிறான்.   இன்னும் இறைத்தூதர்(ஸல்அவர்கள் கூறினார்கள்:
இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். என்னிடம் வந்தவர்கள் தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக் கொண்டு நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது, அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறியஅதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்! "அவர் யார்?" என்று  (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்)  கேட்டேன். அதற்கவர்கள், "ஆற்றில் நீங்கள் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!எனக் கூறினார்கள். - அறிவிப்பாளர் : ஸமுரா (ரலி)புகாரீ 2085.

எனவே அன்பார்ந்த சகோதரசகோதரிகளே,  நம்மில் வசதியுள்ளவர்கள் ஏழ்மையில் உழல்வோருக்குக் கண்டிப்பாக வட்டியில்லாக் கடன் கொடுக்க முன்வரவேண்டும்வசதியற்றவர்கள் வட்டிக்காகப் பணம் வாங்குதலும்நகை அடகு வைத்தலும் செய்யாமல் இருக்க வேண்டும்வட்டியை ஒழிக்கப் போராட வேண்டும்வட்டியில்லாக்  கடன் திட்டத்தை ஒவ்வொரு ஊரிலும் ஏற்படுத்த வேண்டும்அப்போது இந்த உயிர்க்  கொல்லியான வட்டி, இந்த உலகை விட்டு ஒழியும்இன்ஷா அல்லாஹ்.   
நிச்சயமாக நல்லது செய்வோருக்கு அல்லாஹ் எப்போதும் துணையிருப்பான்.

ஆக்கம் - ஹாஜிரா தாஜுன்நவி மும்பை.