Saturday 29 June 2013

 (வட்டி தவிர்த்த  வாழ்வு) 

வட்டி தவிர்த்த வாழ்வு



இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்கள்

ஆளுக்கு ஆளு தருவதுண்டு
அசலுக்கு மேலும் வளர்வதுண்டு 
நாட்டுக்கு நாடு பெறுவதுண்டு 
அது இல்லையென்றால் எதுவுமில்லை !
தொழிலில்லை !முதலில்லை! கடனுமில்லை! 
சொல்லப் போனால் உலகமெங்கும் 
வரவில்லை! செலவில்லை! வழக்குமில்லை! 

அதன் ஆயுள் கெட்டி 
மெல்லப் பார்க்கும் எட்டி 
அது போடும் குட்டி 
அதன் பேர் வட்டி. 

உலகை  ஆசைதான் ஆட்சி செய்கிறது. அதிலும் பேராசை . பேராசைக்கு நமது கண்முன்னே  நடமாடும் எடுத்துக் காட்டாக இருப்பவர்கள் சில மூசாக்கள் அவர்களே வட்டி மூசாக்கள்.  தீய வழியில் கூட பணம் சேர்க்க வேண்டுமென்ற ஆசை தனி நபர்  தொடங்கி உலகம் தழுவிய காட்டுத் தீயாகப் பரவி விட்டது.  தீமை என்று தெரிந்தும் பல நாடுகளின் அரசுகளே இந்த வட்டி தொடர்பான கொடுக்கல் வாங்கல், லாட்டரி, குதிரைப் பந்தயம், மதுவணிகம் ஆகியவற்றில்  வரை முறை இன்றி ஈடுபடுகின்றன. இத்தகைய அரசுகளுக்கு சமூக நலனைவிட பணமே பெரிதாகத் தெரிவதால் சமூகத்தை சுரண்டி சமூகத்துக்கே இலவசம் என்ற பெயரில் திருப்பித் தருகின்றன . 
   
அரசாங்கமும் தனிமனிதனும்  வட்டியை ஒரு தீமையாகவே கருதுவதில்லை. ஆனால் சமுதாயத்தில் இது எவ்வளவு பெரிய சுயநலவாதிகளையும், பேராசைக்காரர்களையும், சகோதர மனப்பான்மை அற்றவர்களையும், பொருளாதார வீழ்ச்சியையும் உருவாக்குகிறது என்பதை யாரும் உணருவதில்லை ஏன்? அரசாங்கத்திற்கும் இது மிகப் பெரிய இழப்பாகும்.

சாதிகளில் பல சாதிகள் இருப்பதைப் போல் வட்டியிலும் பலவகை வட்டிகள் உள்ளன. கந்து வட்டி, மீட்டர் வட்டி, மில்லி வட்டி, நெல்லு வட்டி என்றெல்லாம் வட்டியை வகைப்படுத்தி வணிகம் செய்கிறார்கள். வட்டிக்கடை என்கிற போர்டு ஊரெங்கும் தொங்குகின்றன . அரை மணி நேரத்தில் நகைக் கடன் என்ற விளம்பரப் பதாகைகள் ஊரெங்கும் மாளிகை கட்டி முளைத்துவிட்டன. ஒரு சமுதாயமே வட்டிக்குக் கொடுத்து வாங்கும் சமுதாயம் என்று முத்திரை குத்தப் பட்டு இருக்கிறது. சில குடும்பங்களுக்கு வட்டிப் பணமே வருவாய் என்கிற நிலை இருக்கிறது. அரசுப்பணியோ அல்லது தனியார் பணியோ அவற்றில் இருந்து ஒய்வு பெற்றபின் வட்டிக்கு கொடுத்து வாங்கும் பலர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அன்றாடம் கூலி வாங்கிப் பிழைப்பு நடத்துபவர்கள் தங்களின் கூலியின்  பெரும் பகுதியை அன்றாடம் தின வசூல் வட்டிக் காரர்களிடம் கொடுத்துவிட்டு வாழ்க்கைச் செலவுகளுக்கு வழியற்று நிற்கிறார்கள். வட்டிப் பணத்தில் வாழ்க்கை நடத்துவோர்  அதுவும்  ஒரு வியாபாரம்தானே  என்று நியாயம் கற்பிக்கிறார்கள்.   

உலகின் வளர்ந்த நாடுகள் என்று கணக்கிடப்படுபவை பெருமளவில் உலக நிதி நிறுவனங்களில் இருந்து பெரும் பணத்தை வட்டியாகப் பெற்று தாங்கள் நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களில் ஈடுபடுத்துகின்றன. அவ்விதம் செய்கின்ற நேரங்களில் நிதி நிறுவனங்கள் இடும் அத்தனை கட்டளைகளுக்கும் அடிபணிந்து கையொப்பமிடுகின்றன. பல நேரங்களில் இத்தகைய உலக வங்கி போன்ற நிறுவனங்களின் கட்டளைகளுக்குப் பணிந்து தாங்கள் நாட்டின் அரசுப் பணிகளின் கட்டணத்தை கூட்டுகின்றனர். தமிழ்நாட்டில் பேருந்து கட்டணமும் மின்சாரக் கட்டணமும் உயர்த்தப் பட்டபோது இந்தக் காரணமும் கூறப்பட்டதை நாம் மறந்து இருக்க முடியாது. 

ஏன் வட்டி கூடாது என்று சொல்கிறோம்? இதற்கான பொருளாதாரக் காரணங்களும் சமூக அவலக்  காரணங்களும் நிறைய உள்ளன. பலவற்றைப் பட்டியல் இடலாம்.
  • வட்டித் தொழிலில் கடன் வாங்கியவன் இலாபமடைந்தாலும் நட்டமடைந்தாலும், கடன் கொடுத்தவன் ஒரு குறிப்பிட்ட இலாபத்திற்கு உரியவனாகிறான். ஆனால், வியாபாரம் அல்லது கைத்தொழில் அல்லது வேளாண்மை போன்ற விவகாரங்களில், கடன் வாங்கிய பணத்தை பயன்படுத்துவோனுக்குப் பெரும்பாலும் குறிப்பிட்ட அளவே இலாபம் அவன் கையில்  கிடைக்கிறது . பல நேரங்களில் வட்டிக்குக் கொடுத்தவனுக்கு வேளாண்மை  செய்த விளை பொருள்கள்கூட வட்டியாக சென்றுவிடுகிறது.   
  • வியாபார நடவடிக்கைகளில் விற்பவன் ஒரே ஒரு தடவைதான் இலாபம் பெறுகிறான். ஆனால், வட்டி சம்பந்தமான நடவடிக்கைகளில் கடன் கொடுத்தவன் தன் மூலதனத்தின் (அசல்) மீது தொடர்ச்சியாக இலாபம் பெற்றுக் கொண்டே இருக்கிறான். அந்தத் தொகை வட்டிக்கு மேல் வட்டியாகி அதிகரித்து இறுதியில் கடன்பட்டவனைப் பாழாக்கி விடுகிறது. நிலம் , தங்கம் ஆகியவற்றின் மீது கடன் வாங்கியவன் வட்டியின் அதிகரிப்பால் இறுதியில் தனது வாழ்வின் ஆதாரத்தையே இழந்துவிடுகிறான்.
  • வியாபாரக் கொடுக்கல் வாங்கலில் ஒருவன் தன் உழைப்பு, அறிவு இவற்றின் பலனாக இலாபத்தை அடைகிறான். ஆனால், வட்டி சம்பந்தமான தொழிலில் கடன் கொடுத்தவன் கடன்பட்டவனுடைய வருமானத்திலிருந்து கொள்ளை இலாபம் பெறுகிறான். மேலும், கடன் வாங்கியவனுக்கு இலாபம் கிடைத்தாலும் சரி, நட்டமேற்பட்டாலும் சரி, கடன் கொடுத்தவன் இலாபமே அடைகிறான். அப்படியே அவனுக்குக்குக் கிடைக்க வேண்டிய இலாபம் தாமதித்தால் இன்னும் அதிகமான இலாபம் வரவேண்டுமென்று கணக்கு வைத்து கழுத்தை நெறிக்கிறான்.
  • வட்டித்தொழில்  செய்வோரிடம் கஞ்சத்தனம் , சுயநலம், இரக்கமின்மை, பணத்தைப் போற்றிப் பூஜித்தல் முதலான தீமைகள் இயல்பிலேயே அவர்களின் இதயத்தில் குடிகொண்டுவிடுகின்றன . பச்சாதாபம் , அனுதாப உணர்ச்சி, பரஸ்பர உதவி செய்தல், கூட்டுறவு ஆகியவற்றையும் அது அழித்து விடுகிறது. மக்கள் பணத்தைச் சேர்த்துத் தங்கள் சொந்த நலத்திற்காக மட்டும் அதைச் செலவு செய்யும்படி தூண்டுகிறது. செல்வம் சமுதாயத்தின் எல்லாப் பாகங்களிலும் தடையின்றிச் சுற்றி வருவதைத் தடுக்கின்றது. 
  • ஏழைகளிடம் இருக்கும் சிறு செல்வமும் அவர்களிடமிருந்து  பணக்காரரிடம் செல்லும் ஒரு பாதைக்கு நான்குவழிப் பாதையை  உண்டாக்குகிறது. அதன் விளைவாக, சமுதாயத்தின் செல்வம் ஒரு சிலருடைய பணப்பெட்டிகளில் குவிந்து, இறுதியாக அது சமுதாயம் முழுவதையும் ஏற்றத்தாழ்வான  பொருளாதார வீழ்ச்சியிலும் அழிவிலும் கொண்டு சேர்த்து விடுகின்றது.
  • ஏராளமான பணம் படைத்தோர் அதை வட்டிக்குக் கடன் கொடுத்து, இன்னும் ஏராளமான பணத்தை அதிகரிக்கிறார்கள். இந்த அதிகரிப்பு முன் பணம் வாங்கிய  தொழிலாளிகளுக்குக் கொடுக்க வேண்டிய ஊதியத்தைக் குறைத்ததிலிருந்து கிடைத்தது. பல தொழிலாளர்கள் கொத்தடிமையாக வாழவேண்டிய நிலை ஏற்படுகிறது. இவ்வாறு பணக்காரர் பெரும் பணக்காரராகின்றார்கள். ஏழைகள் மேலும் மேலும் வட்டிக்குக் கடன் வாங்கி பரம ஏழைகளாகின்றார்கள். இறுதியாக சமுதாயம் ஆட்டம் கண்டுவிடுகிறது.
  • சட்டங்களின், அதிபதியான எல்லாம் வல்ல இறைவன்  வியாபாரத்தை  அனுமதித்து, வட்டியை  தடை செய்துள்ளான். அந்த இறைவனின்  வேதத்தில்  ஒன்று ஒளியுடனும், மற்றொன்று இருளுடனும் ஒப்பிடப்பட்டுள்ளது. வட்டிக்குக் கடன் கொடுத்தல் ஒரு தொழிலுமல்ல, வியாபாரமுமல்ல என்பது உண்மையிலும் உண்மையாகும். 
  • தனிக் கல்வியோ, தொழில் அறிவோ தேவையில்லாததால் அது ஒரு தொழில் அல்ல. அது ஒரு அலுவல். இதற்கான தகுதி காதில் ஒரு பென்சில்;  கையில் ஒரு நோட்டு; ஒலி எழுப்பக்கூடிய மணி வைக்கப் பட்ட சைக்கிள்.; இதயத்தில் இரக்கமின்மை; வாயில் வன்முறைப் பேச்சுக்கள்; தட்டிவைக்க சில அடியாட்கள்; சாரயவாடைவீசும் வாய்கள்.  அவ்வளவுதான்.  மனிதர்களுடைய துன்பங்களையும், துயரங்களையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அதனால் வளர்ச்சியடையும் இந்த வேலை எப்போதும் இழிவு. இந்த அலுவலில் ஈடுபட்டவர்கள் பொதுவாக இரக்கமற்ற இழிவானவர்கள். பணக் கஷ்டத்திலுள்ளோரை பலவகைகளிலும் துன்புறுத்தி, அவர்களுடைய வறுமையைப் பயன்படுத்தித் தங்கள் பணத்தை அதிகரித்துக்கொள்கிறார்கள். வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு சொத்துக்களை சூறையாடும் சூழ்ச்சிக்காரர்கள் தாலிக் கொடிகளைக் கூட சந்தியில் வைத்து வர வேண்டிய பாக்கிக்காக வன்முறையால் அறுத்து வசூலிக்கும் சாதி வலிமை உடையோர்  இந்தத் தொழிலை குலத்தொழிலாக செய்கிறார்கள். 
  • முதலாளித்துவ அமைப்பில் எந்த  சிரமமோ  அல்லது உழைப்போ இன்றி  மூலதனத்தின் அளவு பெருகுவதற்கு வட்டியே காரணமாக அமைந்துவிடுகிறது. 
  • சுருக்கமாக சொல்லப் போனால் , வட்டி எனும் கொடிய விஷம்  விளைவிக்கும்  நாசவேலைகள் கொஞ்சமல்ல.  அது இரக்கமின்மையை உண்டாக்குகின்றது. வீண் செலவையும் நீதி தவறிய வாழ்க்கையையும் விளைவிக்கின்றது. பேராசையைப் பெருக்குகின்றது. பொறாமைக்கு வழி வகுக்கின்றது. உலோபித்தனத்தை உற்சாகப்படுத்துகின்றது. வெட்கம் கெட்ட கேவலமான நிலைக்கு மனிதனைத் தாழ்த்தி விடுகின்றது. 
ஆனால், இறைவனின் மார்க்கமான இஸ்லாம்  மார்க்கம் ஒன்றே இந்த விஷச்செடியின் விளைவுகளை உலகுக்கு உணர்த்திக் காட்டி இந்த வட்டி வாங்கும் வழக்கத்தின் மேல்  ஒரு போர்ப்பிரகடனம் செய்து வட்டி என்பது  முற்றிலும் சட்ட விரோதமானதென்று பிரகடனம் செய்து தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது. 

கிரேக்க, ரோம நாகரீகங்களில் மக்கள் வட்டியின் பளுவால் நசுக்கப்பட்டார்கள். ஆனால், தற்கால ஐரோப்பியப் பொருளாதார வல்லுநர்களைப் போன்றே, அந்த நாடுகளின் சட்டம் சமைத்தோர் அதை முற்றிலும் தடுக்கவில்லை. பைபிளில் வட்டி தடுக்கப்பட்ட போதிலும் யூதரல்லாதவர்களிடம் யூதர்கள் வட்டி வாங்குவதை அனுமதித்துள்ளது. இது ஏன் என்பதை நாம் சிந்தித்தால் விஷயங்கள் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும். யூதர்கள் அல்லாதவர்களுக்கு வட்டிக்குக் கடனைக் கொடுத்துவிட்டு திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் அவர்கள் மீது அக்கிரமத்தையும் அநியாயத்தையும் அடக்குமுறையையும் ஏவி விடுவது யூதர்களின் பழக்கம். இதனால்தான் “ஒரு யூதனுடன் கை குலுக்கினால்,  உன் விரல்களை எண்ணிப் பார்த்துக்கொள்” என்கிற பழமொழி உலகில் உலவுகிறது. 

திருமறையாம் திரு குர் ஆன் ஒன்றே எல்லா  வகைகளிலும் வட்டியைத் திட்டவட்டமாகத் தடுத்து உலகம் முடியும் வரை புகழைப் பெற்றுக் கொண்டது.

 உலகமே வியந்து புகழும் மாபெரும் பெருமைக்குரிய அண்ணலார் நபி (ஸல்)  இந்த வட்டித் தொழில் செய்வோரால் ஏற்படும் துன்பத்தையும் அறிந்து கொண்டு, முஸ்லீம்களை  வட்டிக்குப் பணம் கொடுக்கலாகாதென்று உபதேசித்தார்கள். இறுதி மக்கா புனித யாத்திரை - ஹஜ் - செய்த புனிதமான தினத்தில், நபிபெருமானாரவர்கள் அறியாமைக் காலத்திலிருந்து கொடுக்கப்பட வேண்டிய வட்டிப் பணங்களெல்லாம் ரத்து செய்யப்பட்டன என்று விளம்பரம் செய்ததோடு, அதற்கு உதாரணமாகத் தங்கள் பெரிய தந்தை அப்பாஸ் அவர்களுக்கு  வர வேண்டிய வட்டித்தொகை   முழுதும் தள்ளுபடியாகிவிட்டதென்று அறிவித்தார்கள்.  

மிகக் கடுமையான சட்டங்களை இஸ்லாமியப் பொருளாதாரம் வட்டிக்கு எதிராக வழங்கி இருக்கிறது. நிச்சயமாக, இது பொருளாதாரச் சட்டங்களில் மிக்க அறிவு நிறைந்த சட்டமாகும் என உலகப் பொருளியல் வல்லுனர்கள் வியந்து கூறுகிறார்கள். . எந்தெந்த நாடுகளில் உயர்ந்த வட்டி விகிதம் கட்டுப்பாடு இல்லாமல் ஏற்பட்டுள்ளதோ அங்கெல்லாம் கைத்தொழிலிலும், வியாபாரமும் , மக்கள் நிலையும்   முன்னேற்றமடையவே  முடியாது என்று பொருளாதார நிபுணர்கள் இன்று  கூறுகின்றார்கள். 

அதுமட்டுமல்ல, இந்த வட்டியில் தொடர்புடைய எல்லோரும் - பத்திரம் எழுதுவோரும் - சாட்சிகளும் - அல்லாவின் சாபத்திற்குள்ளாவார்கள் எனவும் கூறியுள்ளார்கள். ரிபா - கடுமையான வட்டி மட்டும் தடுக்கப்பட்டுள்ளதெனவும், வேறுவிதமான முறைகள் அனுசரிக்கப்படலாம் என்பதும் இந்தக் கட்டளைகளின் பொருளல்ல. ஆனால், இந்தப் போதனைகளெல்லாம் முதலாளித்துவக் கொள்கையின் மனப்பான்மை, ஒழுக்க நிலைகள், கலாச்சாரம், பொருளாதார அமைப்பு ஆகியவற்றை அழிக்கவே வெளியிடப்பட்டன. மேலும் ஒரு புதிய அமைப்பை உண்டாக்கி, அதில் கஞ்சத்தனத்திற்குப் பதிலாகத் தானதருமம், சுயநலத்திற்கு பதிலாக ஈகை, இரக்கம்,  அனுதாபம், கூட்டுறவு, வட்டிக்கு மாற்றாக  ஜகாத், பாங்க் முறைக்குப் பதிலாக பைத்துல்மால் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கூட்டுறவுச் சங்கங்கள், இன்சூரன்ஸ் கம்பெனிகள், எதிர்கால நலனை நோக்கி ஏற்பட்ட சேமிப்பு முதலியன ஏற்படுத்தப்படும் சூழ்நிலைகளைத் தடுக்கவும் இந்தப் போதனைகள் குறிக்கோளாகக் கொண்டிருந்தன.

“Makkan verses deal with certain pillars of the Islamic economic system, like obligation of Zakah and prohibition of Riba. “ என்று கூறுகிறார் முனைவர் மன்சூர் காப் என்கிற இஸ்லாமிய பொருளியல்  அறிஞர். அதாவது மக்காவில் இறக்கப் பட்ட ஆயத்துகளே இஸ்லாமியப் பொருளாதாரத்துக்கு தூண்களாக நிற்கும் ஜகாத்தை கடமையாக்கி,  வட்டியை தடை செய்யும்    கருத்துக்களுடையவைகளாக  இறக்கப் பட்டன என்று கூறுகிறார். மேற்கோளாக ,

That which you lay out for increase  (by way of Riba) through the property of (other) people will have no increase with Allah; but that which you lay out for Zakah seeking the Countenance of Allah. (will increase); it is these who will get a recompense multiplied. (30:39)

மனிதர்களின் பொருள்களுடன் (சேர்ந்து) பெருக்குவதற்காக வேண்டி, வட்டிக்கு நீங்கள் எதனைக் கொடுக்கிறீர்களே, அது அல்லாஹ்விடம் (நன்மையைக் கொண்டு) அதிகரிக்காது. அல்லாஹ்வின் பொருத்தத்தை நீங்கள் நாடியவர்களாக ஜகாத்திளிருந்து நீங்கள் கொடுப்பதானது (அது அல்லாஹ்விடத்தில் பெருகும்)அத்தகையோர்தாம் (தம் நன்மைகளை) இரட்டிப்பாக்கிக் கொள்கின்றனர். 

என்பதைக் காட்டுவதுடன்,

It is noteworthy that while providing early hints of the forthcoming economic system of Islam, these Makkan verses associate economic behavior with the doctrine of accountability before God on the Day of Judgement.  

The building of economic system was completed in Madinah with the establishment of state by the Prophet  Muhammed (PBUH). 

இஸ்லாத்தின் பொருளாதார சட்டம் என்னவாக இருக்கப் போகிறது என்பதன் ஆரம்பக் குறிப்பை மக்காவில் இறக்கப் பட்ட ஆயத்தில் கோடிட்டுக் காட்டிய இறைவன் மதினாவில் நிறுவப்பட்ட  இஸ்லாமிய ஆட்சியில் அமுல படுத்திக் காட்டவைத்தான்  என்றும் கூறுகிறார். 

(Relevance Definition and Methodolagy of Islamic Economics- Dr. Monzer Kahf).

வட்டி கொடுப்போரையும் வாங்கி முடிப்போரையும் பற்றி திருமறை மற்றும் நபி மொழிகள் செய்துள்ள போர்ப் பிரகடனங்களையும் அவை பற்றிய பொருளியல் அறிஞர்களின் குவியல் குவியலாகக் கொட்டிக் கிடக்கும் கருத்துக்களையும்  தொடர்ந்து பார்க்கலாம்.
...
இபுராஹீம் அன்சாரி