Saturday 27 July 2013

அமைதிக்கு அருமருந்து

.அமைதிக்கு அருமருந்து

பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட இஸ்லாத்தின் கோட்பாடுகளில், இஸ்லாத்தின் ஐந்து கட்டாயக் கடமைகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டுஉலகில் மனித இனம் வாழ்வதற்குப்  பொருளாதாரம் எவ்வளவு முக்கியம் என்பதை இறைவனே உலகுக்குப் பறைசாற்றும் ஒரு ஜீவாதாரக் கொள்கை ஜகாத்.  படைத்த இறைவனின் சாம்ராஜ்யத்தின் பொருளாதாரக் கொள்கைதான் ஜகாத்.  இஸ்லாமிய அமைச்சரவையின் பொருளாதாரத்  திட்டக் கமிஷனின் தலைமை இடம் ஜகாத்துக்குத்தான்.  ஜகாத் என்பது பக்தர்கள் செலுத்தும் காணிக்கையல்ல; கடமை.  ஜகாத் என்பது ஒரு சடங்கு அல்ல ; சட்டம்.

தனது செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை எழைகளுக்கு வருடா வருடம் வரியாகப் பிரித்துக் கொடுத்துவிட வேண்டுமென்கிற சட்டம் சமுதாயத்தில் பாய்கிறபோது கொடுப்பவருக்கும் துன்பமில்லை. அதைப் பெறுபவர் அந்த நிதியைக் கொண்டு தங்களின் ஏழ்மை வாழ்வை செம்மையாக்கிக் கொள்ள இயலும் என்பதே இதன் பொருளாதாரத் தத்துவம். ஒரு பணக்காரரின் வருமானத்திலிருந்து ஒரு சிறு அளவு,  ஜகாத்தாக ஏழைக்குச் சென்று சேர்கிற பொழுது பணக்காரருக்கு ஏற்படும் இழப்பைவிட ஏழைக்குக் கிடைக்கும் இலாபமே அதிகமாகும். இதனால் ஒட்டுமொத்த சமுதாயத்தில் சமத்துவம்    சம்மணம்  போட்டு அமரும்.

ஜகாத் என்பது ஒரு பெரிய ஏரியின் வரப்புகள் நீர் மிகுதியால் உடைப்பெடுத்துக் கொள்ளாமல்  வெட்டிவிடப்பட்ட ஒரு சிறு வாய்க்கால். அதிலிருந்து ஏழைகளின் வயல்களை நோக்கி உற்பத்திக்கான நீர் ஓடிக்கொண்டே இருக்கும் . அதே நேரம் இறைவனின் அருள் என்கிற ரஹ்மத்தும், பரக்கத்தும் பெருமழையாய்ப் பெய்து ஏரியை நிரப்பிக் கொண்டே இருக்கும். ஆண்டுதோறும் ஜகாத்  செலுத்தப் படவேண்டுமென்கிற  விதி,  இந்த ஆன்மீகப் பணியின் மூலமான சமுதாய வளர்ச்சி   தொய்வில்லாமல் நடைபெற வழி வகுக்கிறது.  சொர்க்கத்தில் நமக்கென இடத்தைப் பதிவு செய்யும் நன்மைக் கட்டணமாக ஜகாத் இறைவனிடம் சென்று செயல்படுகிறது.

‘ஆசைகளின் மூட்டைஎன வர்ணிக்கப்படும்  மனிதனிடம் இயல்பாகவே பொருள்  மோகம் இருக்கின்றது. பொருளாதாரத்தைத் தேடி, திரட்டி, அதைப் பார்த்து மகிழ்வடையும் மனநிலை காணப்படுகின்றது.  தொடர்ந்து நியமப்படி ஜகாத் வழங்கிவரும் ஒருவனிடம், பொருளாதாரத்தின் மீதான வெறித்தனம் தணிந்து, அதிலே ஓரளவு தாராளத் தன்மை ஏற்படும். இது ஏற்பட்டு விட்டால், நியாயமான முறையில் பணம் திரட்டும் பக்குவம் ஏற்பட்டுவிடும். நீதியையும் நேர்மையையும் நெறிப்படுத்தும் மாபெரும் சக்தி பெற்றது ஜகாத்.

தான் தேடிய செல்வத்தை, தான் கூட அனுபவிக்காமல், அதனைப் பார்த்துப் பார்த்து ரசிக்கும் தன்மை பலரிடம் காணப்படுகின்றது. தனக்கே செலவழிக்காதவன் பிறருக்கு எப்படிக் கொடுப்பான்? இறைவனின் ஆணையை ஏற்று, இந்தக் கட்டாய தர்மத்தைச் செய்பவனிடம் கஞ்சத்தனம் விடுபட்டுவிடும். அதன் பின் அவன் தாராளத் தன்மையுடன் உபரியான தர்மங்களைச் செய்பவனாக மாறிவிடுவான். கஞ்சத்தனம் இஸ்லாத்தில் கண்டிக்கப்பட்ட குற்றமாகும்.

தனக்குக் கிடைத்தது அடுத்தவனுக்குக் கிடைத்துவிடக் கூடாது, அல்லது அடுத்தவனுக்குக் கிடைத்தது அவனிடமிருந்து அழிந்துவிட வேண்டும் என்ற உணர்வே பொறாமையாகும்.  ஜகாத்  கொடுப்பவன் தன்னைப் போல் அடுத்தவனும் பொருளாதார முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று விரும்புவதால், அவனிடமிருந்து இயல்பாகவே பொறாமைக் குணம் பாதியிலேயே கழன்றுபோய் விடுகிறது. ஏழைகள்கூட செல்வந்தர்கள் மீது பொறாமை கொள்ளலாம். அதே செல்வந்தர்கள் ஜகாத்  மூலம் தமக்கு உதவும் போது தமக்கு உதவுபவர்கள் மீது அவர்களுக்கு பொறாமை ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே, ஜகாத் கொடுப்பவர், எடுப்பவர் இருவரிடமும் பொறாமை என்ற தீய குணம் ஏற்படுவதைத் தவிர்க்கின்றது.

பணம் படைத்தவர்களில் பலர்  சமூக உணர்வு அற்றவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் ஜகாத் வழங்குபவர்களாக மாறும்போது சமூகத்தில் நலிவடைந்தவர்களின் வாழ்க்கை நிலவரத்தைப் புரிந்துகொள்ளவும், அவர்கள் மீது அக்கறை  காட்டவும் வாய்ப்பு ஏற்படுகின்றது.  இவர்கள் ஏழைகளின் மீது  அக்கறை செலுத்தும் போது,  இயல்பாக சமூக உணர்வு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகின்றது. இவ்வாறு நோக்கும் போது ஜகாத் பல்வேறு விதத்திலும் மனித மனங்களைத் தூய்மைப்படுத்தி நல்ல மாற்றங்களை விளை விக்கின்றது.
அத்துடன் நேற்றைக்குப் பணக்காரன் இன்றைக்குப் பிச்சைக்காரன் ஆகும்படி அவனது செல்வங்கள் வன்முறையால் பிடுங்கப் படும் வரலாறுகளை ஜகாத் தடுத்து நிறுத்துகிறது. ஒரு ஆன்மீக உடன்பாட்டில் இறையச்சத்தில் -  ஏழைகளுக்குஅவர்களுக்குரிய செல்வம் பணக்காரர்களால் பாசத்துடன் பந்தி வைத்துப் பரிமாறப் படுகிறது.  அரசியல் சரித்திரத்தில் ஆன்மீக மேம்பாட்டில் அமைதியை  தழைக்கச் செய்யும் அருமருந்தே ஜகாத்.

(சகோதரர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் ‘அதிரை நிருபர்’ வலைத்தளத்தில் எழுதிவரும் ‘இஸ்லாமியப் பொருளாதாரம்’ எனும் கட்டுரைத் தொடரின் அண்மைப் பதிவிலிருந்து தொகுக்கப் பெற்ற கருத்துக் கோவை.)

Wednesday 24 July 2013

வட்டியை இஸ்லாம் தடுப்பது ஏன்?

வட்டியை இஸ்லாம் தடுப்பது ஏன்?

இது போன்ற கேள்வி, அடிக்கடிச் சில சமுதாயக் கூட்டங்களின்போது  எழுப்பப் படுகின்றது.  ஏனெனில், வட்டியைக் குறிக்கும் அரபுச் சொல்லான 'ரிபா' என்பது வேறு; ஆங்கிலச் சொல்லான 'இன்டரெஸ்ட்' என்பது வேறு என்று சிலர் கருத்துக் கொண்டிருப்பதுதான்.  அதனால், இரண்டையும் வேறு படுத்தி, இன்று பரவலாக இருக்கும் வட்டி முறையை நியாயப் படுத்துகின்றார்கள்.

'ரிபா' எனப்படும் இந்த வட்டிதான் குர்ஆனாலும் ஹதீஸாலும் தடை செய்யப் பட்ட ஒன்று என்பதில் ஐயமில்லை.  குர்ஆன் வட்டியைப் படிப்படியாக நான்கு இறைவசனங்கள் மூலம் தடை செய்துள்ளது.  அவற்றுள்   30:39 என்ற முதல் வசனம் மக்காவில் அருளப்பட்டது.  எஞ்சிய மூன்று வசனங்களும் (4:161, 3:130-2, 2:275-81) மதீனாவில் அருளப்பட்டன.  

இவற்றுள் இறுதியான வசனம் (2:275-81) அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்நாள் இறுதிப் பகுதியில் இறங்கிற்று.  வட்டியை வாங்கித் தின்றவர்களை இவ்வசனங்கள் வன்மையாகக் கண்டித்ததோடு மட்டுமன்றி, அவர்கள் இறைவனுடனும் இறைத்தூதருடனும் போர் தொடுப்போர் என்றும் பறை சாற்றின.  இவ்வசனங்கள் வட்டிக்கும் வணிகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டைத் தெளிவாக எடுத்துரைத்தன.  நிலுவையிலிருந்த வட்டிகள் அனைத்தையும் விட்டுவிடும்படியும், அதில் அவர்கள் ஈடுபடுத்திய முதலீட்டை மட்டும் எடுத்துக்கொள்ளும்படியும் முஸ்லிம்களை வலியுறுத்தின.  தம்மிடம் வட்டி வாங்கியவர்கள் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத சிரமமான நிலையில் இருந்தால், அதைக்கூட விட்டுக் கொடுக்கும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவான வார்த்தைகளால் வட்டியைத் தடை செய்துள்ளார்கள்.  வட்டி வாங்குபவர்களை மட்டுமன்றி, வட்டிக்கு அடிமைப்பட்டுக் கொடுப்பவர்களையும், வட்டிக் கணக்கு எழுதுபவர்களையும், அதற்குச் சாட்சியாக இருப்பவர்களையும் அதில் சபித்துள்ளார்கள்.
                          (ஆதார நூல்கள்: ஸஹீஹ் முஸ்லிம், திர்மிதீ, முஸ்னது அஹ்மத் )

வட்டியை, அது பாவம் என்று தெரிந்துகொண்டே, வாங்குபவர்கள் தம் சொந்தத் தாயை முப்பத்தாறு தடவை விபச்சாரம் செய்த குற்ற உணர்வைப் பெறுகின்றார் என்றும் நபியவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
                                                       (ஆதார நூல்கள்:  இப்னு மாஜா, பைஹகீ)

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே குர்ஆனும் நபிவழியும் 'ரிபா' எனும் வட்டியைத் தடை செய்திருக்க, உலகின் பெரும்பாலான சமுதாயங்கள் முஸ்லிம்கள் உள்பட இன்னும் இதைப்பற்றிப் புரியாமல் தெளிவற்ற நிலையில் இருப்பது, அது சரியாக விளக்கப்படவில்லை எனக் கருதுவது வியப்பிலும் வியப்பாக உள்ளது!  எனவேதான், இந்த 'ரிபா' நம் முன்னோர்களால் எவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டது என்பதை அதன் உண்மையான பொருளை விளக்கி நாம் அலச வேண்டியதாக இருக்கிறது. 

அரபுச் சொல்லகராதிகளை நமக்குத் தந்தவர்களான இப்னு மன்தூர் (லிசானுள் அரப்), அல்-ஜுபைதீ (தாஜுல் அருஸ்), ராகிப் அல்-இஸ்ஃபஹானி (அல்-முஃப்ரதாத்) ஆகியவர்களைச் சான்றுகளாகக் கொள்ளவேண்டிதாய் உள்ளது.  இவர்கள் அனைவரும் 'ரிபா' என்பது, 'கூடுதல்', 'மேலதிகமானது', 'விரிவடைவது' அல்லது 'வளர்ச்சியடைவது' போன்ற பொருள்களில் எடுத்தாள்கின்றனர்.  எனினும், எல்லாப் பொருள் வளர்ச்சிகளும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவையல்ல.  இதனடிப்படையில், இலாபம் என்பது, போட்ட முதலைவிடக் கூடுதலாக நமக்குக் கிடைப்பதாகும்; எனவே, அது நமக்குத் தடை செய்யப்பட்டதன்று.  அவ்வாறாயின், தடை செய்யப்பட்டது என்பது யாது?

இந்தக் கேள்விக்கு விடை தர முழு உரிமை பெற்ற மாமனிதர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவர் மட்டுமே எனக் கூறலாம்.  ஏனெனில், அவர்கள்தாம் கடன் அளித்தல் என்ற ஒன்றுக்காக ஏதேனும் அன்பளிப்பையோ, சேவையையோ, சலுகையையோ அடைவதைத் தடை செய்த பெருமான்.  அவர்கள்தான் சொன்னார்கள்:  "பிறருக்குக் கடன் வழங்குபவர், அதற்காக அன்பளிப்பு எதையும் பெறக் கூடாது."  நபிமொழிக் கலை வல்லுநர் இமாம் புகாரி (ரஹ்)அவர்கள் அறிவித்த இந்த நபிமொழியை இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் தமது 'அல்-முன்தகா' எனும் நூலில் எடுத்துரைக்கிறார்கள்.

இன்னொரு நபிமொழியும் இதனைத் தெளிவு படுத்துகின்றது:  "மற்றவருக்குக் கடனுதவி செய்யும் ஒருவர், அவருடன் வழக்கமாக நடந்துகொள்வது போலன்றி, அதற்குப் பகரமாகக் கடன் பெற்றவரிடமிருந்து ஓர் உணவையோ அவருடைய வாகனத்தின் மீது சவாரி செய்வதையோ பகரமாகப் பெறக்  கூடாது."  (சுனன் அல்பைஹகி, கித்தாபுல் புயூஉ)

மேற்கண்ட நபிமொழிகள், 'ரிபா' என்பதும், இன்று மக்களின் புழக்கத்தில் இருக்கும் 'வட்டி'  (interest) என்பதும் ஒன்றுதான் என்பதைத் தெளிவாக்குகின்றன.  இஸ்லாமிய வரலாற்றில் முன்னிலை வகிக்கும் பேரறிஞர்கள் பலரின் எழுத்துகளும் இக்கருத்தைத்தான் பிரதிபலிக்கின்றன.  இதற்கு மாறான கருத்தைத் தரும் குர்ஆன் விரிவுரைகளோ அரபி மொழி அகராதிகளோ இல்லை என்பதுவே உண்மை நிலை.  பேரறிஞரும் வான்மறை குர் ஆனின் விரிவுரையாளருமான அல்-குர்த்துபி (இறப்பு: ஹிஜ்ரி 671 / கி.பி. 1070) அவர்கள் தமது விரிவுரையில் குறிப்பிடுவதாவது: 

"கடனாகக் கொடுக்கப்பட்ட தொகையைவிடக் கூடுதலாகப் பெறும் சிறிய பெரிய தொகை எதுவாயினும், ஒரு பிடி வைக்கோலாயினும் ஒரு தானியத்தின் பகுதியாயினும், அது வட்டியேயாகும் என்ற நபியவர்களின் அறவுரையை  முஸ்லிம்கள் அனைவரும் ஒருமித்த அடிப்படையில் ஏற்றுக்கொள்கின்றனர்."

'லிசானுள் அரப்' எனும் அரபி அகராதியைத் தொகுத்த இப்னு மன்தூர் (இறப்பு: ஹிஜ்ரி 711 / கி.பி. 1311) அவர்கள் தெளிவாகக் குறிப்பிடுவதாவது:  ஒருவர் கொடுத்த கடனுக்காக எந்த ஒரு தொகையையோ வெகுமதியையோ ஒரு பிரதி உபகாரத்தையோ பெற்றுக்கொள்வதற்குப் பெயர்தான் தடை செய்யப்பட்ட வட்டியாகும்.  இக்கருத்தையே அறிஞர் ஃபக்ருத்தீன் அல்-ராஜி (தஃப்ஸீர் அல்-கபீர்), அபூபக்ர் அல்-ஜஸ்ஸாஸ் (அஹ்காம் அல்-குர்ஆன்) போன்ற அறிஞர்கள் வலியுறுத்திப் பேசுகின்றனர்.

எனவே, பண்டைக் காலம் முதல், 'ரிபா' என்ற சொல்லுக்கு, கடனுக்கான தவணையின் முடிவில் அந்தக் கடன் தொகையுடன் நிபந்தனையிட்டுச் சேர்த்துக் கொடுக்கும் தொகை என்றே பொருள் கொள்ளப்பட்டு வந்துள்ளது.  அண்மைக் காலத்தில் கூடிய அனைத்துலக இஸ்லாமியச் சட்ட வல்லுனர்களின் மாநாடுகளில் (பாரிஸ்-1951, கெய்ரோ-1965, 1985, மக்கா-1986) ஒருமித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தும் இதுவேயாகும்.

இவ்வாறான உறுதி மிக்க பெரும்பான்மைக் கருத்துகளுக்கு முன்னால், வட்டி இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதன்று என்று ஓரிருவர் கருத்துத் தெரிவிப்பதால் உண்மைக்கு ஒன்றும் குறைவு வந்துவிடப் போவதில்லை.  இது போன்ற அங்குமிங்குமான 'புரட்சி' மொழிகளால் பொதுக் கருத்தில் எந்த விதப் பாதிப்பும் உண்டாகிவிடாது.  இவற்றின் காரணமாகவே சிலர் 'வட்டி' என்பதன் பொருள் யாது என்பதில் குழம்பி நிற்கிறார்கள்.  'ரிபா' எனும் சொல் 'ஷரீஆ'வில் இருவேறு பொருள்களில் கையாளப்படுவதுதான் இந்தக் குழப்பத்திற்குக் காரணம் எனலாம்.  அவ்விரண்டையும் அவற்றின் சரியான நிலையில் மக்கள் பொருத்திப் பார்க்காததும் மற்றொரு காரணமாகும். 

Saturday 20 July 2013

செல்வமும் வறுமையும்

'அவர்களில் அழகிய நல்லறம் செய்பவர் யார் எனச் சோதிப்பதற்காக இந்தப் பூமியின் மேல் உள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நிச்சயமாக நாம் ஆக்கியுள்ளோம். மேலும், நாம் அதிலுள்ள அனைத்தையும் நிச்சயமாக (ஒருநாள்) அழித்துப் பாலைநிலமாக்கி விடுவோம். (அல்-குர்ஆன் 018:007-008)

கடவுளை எல்லா மதத்தவர்களும் நம்புகின்றனர். ஆனால் மற்ற எந்தச் சமயத்தவர்களையும் விட முஸ்லிம்களின் கடவுள் நம்பிக்கை வலிமை மிக்கதாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது. பக்திமான்களாக இருந்தவர்கள்கூட, தங்கள் வாழ்க்கையில் துன்பங்களைச் சந்திக்கும் போது நாத்திகர்களாகி விடுவதை மற்ற மதத்தவர்களிடம் சர்வ சாதாரணமாகக் காண்கிறோம். கடவுள் என அவர்கள் நம்புகின்ற கற்சிலைகளுக்கு முன்னால் நின்று கொண்டு அதைத் திட்டுகின்ற காட்சியையும் மண்ணை வாரி தூற்றுகின்ற காட்சியையும் பிற மதத்தவர்களிடம் சர்வ சாதாரணமாக காண் முடிகின்றது.

"கடவுளே! உனக்கு கண் இருக்கிறதா?" என்றெல்லாம் துன்பம் வரும் வேளையில் புலம்புகின்றவர்களையும் நாம் பார்க்கிறோம். கடவுளை நம்புகின்ற மற்ற மதத்தவர்களிடம் காணப்படும் இந்தக் கோளாறு முஸ்லிம்களிடம் காணப்படுவதில்லையே அது ஏன்? மற்ற மதத்தினர் தவறான அடிப்படையின் மீது தங்கள் நம்பிக்கை எனும் மாளிகைகளை எழுப்பிக் கொண்டதுதான் இதற்குக் காரணம். இவ்வுலகில் வாழ்கின்ற மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான செல்வச் செழிப்புடனும் வசதி வாய்ப்புகளுடனும் இருப்பதில்லை. சிலர் அதிகமான வசதிகளையும் பதவிகளையும் பெற்றுள்ளனர். பலர் இத்தகைய வாய்ப்பைப் பெற்றிருக்க வில்லை. இதற்குக் காரணம் என்ன என்பதை விளக்கும்போது மற்ற மதங்கள் செய்கின்ற தவறுகள்தாம் அடிப்படைக் கோளாறு எனலாம். "நீ கடவுள் மீது பக்தியுடன் இருந்தால் உனக்கு எண்ணற்ற வசதிகள் கிடைக்கும்" என்று ஏழைகளிடம் அம்மதங்கள் பேசுகின்றன. "சென்ற பிறவியில் நல்ல பக்திமானாக இல்லாததே நீ இப்போது ஏழையாக இருப்பதற்குக் காரணம்" என்றும் அவனுக்கு அறிவுரை கூறுகின்றன. இது போல் வசதி வாய்ப்புகளுடன் உள்ளவனை நோக்கி, "கடவுள் உன்மீது அன்பாய் இருக்கிறார். நீ நல்லவனாக இருப்பதால்தான் இந்த நிலையை அடைந்திருக்கிறாய்" என்றும் "சென்ற பிறவியில் நீ நல்லவனாக இருந்ததால் தான் இந்த உயர்ந்த நிலை கிடைத்தது" என்றும் பேசுகின்றன.

செழிப்பாய் இருந்தவனுக்கு ஒரு நட்டம் ஏற்பட்டால், "இவன் ஏதாவது தவறு செய்திருப்பான்" என்று கூறுவதும் அதனால்தான் இப்படி ஏற்பட்டது என்று பேசுவதும் இந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான். கீழ் நிலையில் இருந்த ஒருவனுக்கு நல்ல நிலை ஏற்பட்டால் அவன் கொடுத்து வைத்திருக்கிறான். இவன் புண்ணியம் செய்திருப்பான் என்று காரணம் கூறுவதற்கும் இந்த நம்பிக்கைதான் காரணம். இந்த நம்பிக்கை ஆழமாகப் பதிந்த பிறகு ஒரு கேடுகெட்டவன் உயர்ந்த நிலையை அடைவதைப் பார்க்கும் போதும் ஒரு நல்லவன் சொல்லொனாத் துன்பத்தை அடையும் போதும் கடவுள் நம்பிக்கையே அவன் உள்ளத்திலிருந்து விலகி விடுகிறது. மதத்தை வளர்ப்பதற்காகப் பொய்யான காரணங்களைக் கூறி நம்மை ஏமாற்றி விட்டனர் என்று அவனுக்குக் கோபம் ஏற்படுகின்றது. இதனால் தான் கடவுள்(?) மீதே மண்ணை வாரித் தூற்ற முடிகின்றது.

ஆனால் இஸ்லாம் பொய்யான காரணங்களைக் கூறி மக்களை ஏமாற்றவில்லை. பொய்யான வாக்குறுதிகள் எதனையும் அளிக்கவில்லை. எது உண்மையோ அதை மட்டுமே கூறுகின்றது. இவ்வுலகில் உள்ள ஏழைகள் பலரை நாம் பார்க்கிறோம். அவர்கள் அனைவரும் கெட்டவர்களாக இருப்பதில்லை. அதுபோல் அனைவரும் நல்லவர்களாகவும் இருப்பதில்லை. அவர்களது ஏழ்மை நிலைக்கும் அவர்களது பாவ புண்ணியத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பது கண்கூடாகத் தெரிகின்ற உண்மை.

அதுபோல் செல்வந்தர்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர். அவர்களின் செல்வ நிலைக்கும் பாவ புண்ணியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாமலிருப்பதைக் காண்கிறோம். இந்த நிதர்சனமான உண்மையை அப்படியே கூறுகின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே! இவ்வுலகில் நல்ல வசதி வாய்ப்புகளுடன் இருப்பதற்கும் நல்லவர்களாக இருப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த வசதிகளைப் பெற்ற பிறகும் நீங்கள் நல்லவர்களாக வாழ்கிறீர்களா என்று சோதித்துப் பார்க்கவே இவை வழங்கப்பட்டுள்ளன. வசதிகள் வந்தபின் அதன் காரணமாக ஆணவம் பிடித்து அலைந்தால் நீ கெட்டவனாவாய்! அதை மற்றவருக்கு வாரி வழங்கி நற்செயல்களில் உன்னை ஈடுபடுத்திக் கொண்டால் நல்லவனாவாய் என்று இஸ்லாம் கூறுகின்றது. அதுபோல் நீ வசதி வாய்ப்புகளைப் பெறவில்லை என்பதால் நீ கெட்டவன் இல்லை. இந்த வறுமையின் காரணமாக நீ தடம் மாறுகிறாயா அல்லது தடம் புரளாமல் உறுதியாக நிற்கிறாயா? என்று சோதித்துப் பார்க்கவே இந்த நிலை என்று இஸ்லாம் கூறுகின்றது. செழிப்பு வறட்சி இரண்டுமே இரண்டு வகையான பரீட்சைகள் என்று இஸ்லாம் கூறுகின்ற காரணத்தினால்தான் முஸ்லிம்கள் எத்தகைய துன்பத்தை அடைய நேர்ந்தாலும் அவர்கள் அதைப் பொறுத்துக் கொள்கின்றனர். "கடவுளே உனக்கு கண்ணில்லையா?" என்று கேட்பதில்லை. இரண்டு நிலையில் எது ஏற்பட்டாலும் இரண்டும் சோதனைதானே தவிர நம்மை நல்லவன் கெட்டவன் என்று வழங்கப்படும் தீர்ப்பு அல்ல.

இனிமேல்தான் தீர்ப்பு வழங்கப் படவுள்ளது. அங்கே நல்ல தீர்ப்புப் பெறுவதற்காக வறட்சியிலும் செழிப்பிலும் நிலை குலையாமல் இருக்க வேண்டும் என்று உறுதியான அடிப்படையின்மீது முஸ்லிம்களின் நம்பிக்கை எழுப்பப் பட்டுள்ளது. அல் கஹ்ஃப் (குகை) அத்தியாயத்தின் ஏழாவது வசனமும் அந்த அடிப்படையைத் தான் சொல்லித் தருகின்றது. இப்பூமியில் உள்ள செழிப்புகள் யாவும் நீங்கள் நல்லவர்களாக நடக்கிறீர்களா என்று சோதித்துப் பார்ப்பதற்குத்தான் என்று கூறி முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பலமான அஸ்திவாரத்தின் மீது எழுப்புகின்றது. பின்வரும் வசனங்களும் இந்த வசனத்தின் விளக்கவுரைகளாகத் திகழ்கின்றன. 'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (பொறுமையுடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது 'நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள்' (அல்குர்ஆன் 002:155-156). '(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும் உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப் படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும் இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடித் தருகின்ற) தீர்மானத்திற்குரிய செயலாகும்'. (அல்குர்ஆன் 003:186) 'ஒவ்வொர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும் நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர் நம்மிடமே நீங்கள் மீட்கப் படுவீர்கள்'. (அல்குர்ஆன் 021:035). வாழ்வில் இன்பம் வரும்போது அகமகிழ்ந்திருந்து, துன்பம் சூழும்வேளை இறைவனைக் குறைகூறக் கூடாது என்று கீழ்க்காணும் இரு வசனங்கள் முஸ்லிம்களை எச்சரிக்கின்றன:

'இன்னும்; மனிதர்களில் (உறுதியுடன் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான். அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கின்றான். ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின் அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கின்றான். இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான். இதுதான் தெளிவான நஷ்டமாகும்'. (அல்குர்ஆன் 022:011). 'இறைவன் மனிதனை கண்ணியப்படுத்தி, அவனுக்கு பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும்போது 'என் இறைவன் என்னைக் கண்ணியப் படுத்தியுள்ளான்' என்று கூறுகின்றான். எனினும் அவனுடைய வாழ்வாதாரத்தைக் குறைத்து அவனை (இறைவன்) சோதித்தாலோ அவன், 'என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்' என்று கூறுகின்றான்'. (அல்குர்ஆன் 089:015-016) எனவே செல்வமும் வறுமையும் சோதனைக்குத்தான் என்பதை உணர்ந்து சோதனையில் தேறிட வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

நன்றி : இஸ்லாமிய தஃவா