Wednesday 18 July 2012

போட்டியா? இல்லை.

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும். 'முன்னேற்றப் பாதையில் கர்ழன் ஹசனா' எனும் கட்டுரையை 'அதிரை எக்ஸ்பிரஸ்'ஸில் படித்தவுடன் - இன்னும் சிலர் பார்த்தவுடன், "இது பைத்துல் மாலுக்குப் போட்டியானது" அது, இது என்று என்னவெல்லாமோ எழுதித் தள்ளினர்.

நாம் என்னவெல்லாம் சமாதானம் சொன்னாலும், அவர்கள் கேட்கவில்லை. அதைத் தொடர்ந்து, அவர்களே இரண்டு பதிவுகளை அதே தளத்தில் பதிந்து, தமது சினத்தைத் தீர்த்துக்கொண்டனர். வாக்கு வாதம் சூடானபோது, நமது காதுக்கும் கவனத்துக்கும் வந்த செய்திகளையும் வெளிப்படுத்தினோம். இறுதியில், நம்மையும் அவர்களையும் அல்லாஹ்விடமே விட்டுவிட்டு ஒதுங்கிக்கொண்டோம்.

இதற்கிடையில், நடுநிலையாளர்களும் நற்சிந்தனையாளர்களும் நம்மை ஊக்கப்படுத்தித் தம கருத்துகளை வெளியிட்டபோது, மிகப்பலர் நமது நல்ல நோக்கத்தைப் புரிந்து உதவிகள் செய்தும், செய்ய முடிவு செய்தும் இருக்கிறார்கள் என்பதைக் காண முடிந்தது. அல்ஹம்து லில்லாஹ்!

எதிர்வரும் ரமலான் மாதம் மனிதர்களின் ஈகையுள்ளங்களைத் திறந்துவிட்டு, அவர்களை அருள் மழையில் நனையச் செய்யும் அற்புதமான மாதமாகும். அத்தகைய நல்லுள்ளங்கள் 'கர்ழன் ஹசனா'வைப் பயன்படுத்திக்கொள்வான் வேண்டி, இந்த அழகிய கடன் அறக்கட்டளையின் வங்கிக கணக்கை இத்துடன் பதிந்தனுப்புகின்றோம்.

கனரா பேங்க், அதிராம்பட்டினம் கிளை,
Azahiya Kadan Arakkattalai A/C # 1201201001056 / IFSC Code :CNRB0001201

1 comment:

  1. அதிரைப்பட்டினத்தில் ஏறக்குறைய அறுபதாயிரம் மக்கள் தொகைகளைக் கொண்ட ஊரில் ஏழைகளும் அதிகளவில் உள்ளதோடு மட்டுமல்லாமல் அவர்களில் சிலர் இன்னும் பொது அமைப்புகளின் நிதி உதவிச் சேவைகளைப் பயன்படுத்தாமல் அல்லது தெரியாமலே உள்ளனர்.

    யார் அந்த ஏழைகள் ? அவர்களின் நிலைதான் என்ன ? எவ்வாறு உதவியை அடைவது ? அவ் உதவியை பெற நிபந்தனைகள்தான் என்ன ? யாருடைய பரிந்துரை தேவை ? என இதுபோன்றவற்றை எளிதாக விளக்கி அவற்றை உதவி செய்ய முன்வரும் சமூக பொது அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட சகோதரர்கள் போன்றோர்களின் பார்வைக்கு அவர்களைக் கொண்டுச் செல்வது என்பது நமது சகோதர வலைத்தளங்களின் தலையாய கடமைகளில் ஒன்றாகும்.

    அன்புடன்,
    சேக்கனா M. நிஜாம்

    ReplyDelete